புதிய வாகனங்களுக்கு இனி கூடுதல் 'பதிவு கட்டணம்' செலுத்த தேவையில்லை!

Home > தமிழ் news
By |
புதிய வாகனங்களுக்கு இனி கூடுதல் 'பதிவு கட்டணம்' செலுத்த தேவையில்லை!

புதிதாக கார் மற்றும் இருசக்கரவாகனம் வாங்கும் போது ஆர்டிஓ கட்டணம் எனக்கூறி அதிக தொகையானது வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்தது.இதுகுறித்து விற்பனையாளர்களிடம் கேட்டால் ஆர்டிஓ வேலைக்காக இந்த தொகை வசூலிக்கப்படுவதாக வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.தினசரி ஒரு நாளைக்கு சராசரியாக 7,434 பேர் புதியதாக வாகனங்களைப் பதிவு செய்கின்றனர்.

 

வாகனங்கள் பதிவு எண் வழங்குதல், உரிமையாளர்களின் பெயர் மாற்றம், உரிமம் புதுப்பித்தல் உட்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் புதிதாக வாகனங்களை வாங்கும்போது இதர கட்டணமாக விற்பனையாளர்கள் கூடுதலாக பணம் வசூலிப்பதாக தொடர்ந்து  புகார் எழுந்தவண்ணம் இருந்தது.

 

இதுகுறித்து ஆர்டிஓ அதிகாரிகள் கூறுகையில் 'இருசக்கர வாகனம் ஒன்றுக்கு ரூ.200, அதிக சிசி திறன் கொண்ட வாகனம் என்றால் ரூ.300, இதேபோல் கார் ஒன்றுக்கு ரூ.600, பெரிய சொகுசு வகை காருக்கு ரூ.1000 வரை மட்டுமே பதிவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுவும் தற்போது இணைய தளம் மூலமாகவே கட்டணம் செலுத் தப்படுகிறது.ஆனால் சில விற்பனையாளர்கள் தங்களின் பெயரை சொல்லி வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணத்தை  வசூலிக்கிறார்கள்.

 

மேலும் அவர்கள் கூறுகையில்  மத்திய அரசு தற்போதுள்ள இணையதள சர்வரை தரம் உயர்த்தி வருகிறது. இதன் மூலம் விண்ணப்பித்த அன்றே பதிவுச்சான்று, நம்பர் பெற வழிவகை செய்யப்படும். மேலும் வாகனம் வாங்கும் இடங்களிலேயே பதிவுச்சான்று பெறும் திட்டத்தை மத்திய அரசு சில இடங்களில் அறிமுகப்படுத்தி   உள்ளது. இதன்படி, சம்பந்தப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் ஷோரூமுக்கே சென்று வாகனத்தை ஆய்வு செய்து, ஆன்லைன் மூலம் ஆர்டிஓவுக்கு ஆவணம் அனுப்பி வைப்பார். தமிழகத்தில் விரைவில் இத்திட்டம் அறிமுகமாகவுள்ளது. இதன்மூலம் மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முடியும்.

RTO, GOVERMENT