கிரிக்கெட் உலகில் தோனிக்கு கிடைத்த பெருமிதம்.. கொண்டாடும் ‘தல’ ரசிகர்கள்!
Home > News Shots > தமிழ் newsமகேந்திர சிங் தோனிக்கு நெருக்கமான மைதானம் ஒன்றின் பெவிலியனிற்கு M.S DHONI PAVILION என பெயர் சூட்டப்பட்டு இருப்பது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த போதும், தற்போது கேப்டன் பதவியில் இல்லாத சூழலிலும் தோனியின் மீதான கவனம் கொஞ்சம் கூட ரசிகர்களுக்கு குறைந்தபாடில்லை என்றே சொல்லலாம். 2004-ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அறிமுக கிரிக்கெட் வீரராக களமிறங்கிய தோனி தொடர்ந்து தனது தீவிர ஆட்டத்தால் இந்திய அணியின் கேப்டனாக வளர்ந்தார்.
தற்போது இந்திய அணியின் கேப்டனாக இல்லாத நிலையிலும் அணியின் வெற்றிக்கு வழி வகுக்கும் முக்கிய ஆட்டக்காரராகவும், விக்கெட் கீப்பராகவும் இருந்து வருகிறார். முன்னதாக ஐசிசியின் 3 முக்கிய வெற்றிக் கோப்பைகளை குவித்து தனக்கென ரசிகர்கள் கூட்டத்தையும் மலைபோல் குவித்திருந்தார்.
இந்த நிலையில் தோனியின் ரசிகர்கள் பெருமிதம் கொள்ளும் விதமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள மைதானத்தின் தெற்குப் பகுதியில் உள்ள பெவிலியனிற்கு M.S.DHONI PAVILION என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு பெவிலியன் ஒன்றுக்கு கிரிக்கெட் வீரரின் பெயர் சூட்டப்பட்டு ‘தல’ தோனிக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதால் அவரது ரசிகர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் என திரும்பும் பக்கம் எல்லாம் பெருமிதமாக கொண்டாடி வருகின்றனர்.
The MS Dhoni Pavilion at JSCA 💙 pic.twitter.com/SkAj4udGZ2
— ˗ˏˋBestOfDhoniˎˊ (@BestOfDhoni) February 11, 2019