இதயத்துடிப்பு அதிகரிப்பு'..பள்ளிகளில் காபிக்குத் தடை விதித்த அதிகாரிகள்!
Home > தமிழ் newsதென்கொரியாவில் நடைபெற்ற ஆய்வில் காபி குடிப்பதால் மாணவர்களின் இதயத்துடிப்பு அதிகரிப்பதால் பள்ளிகளில் காபி மற்றும் தின்பண்டகளுக்கு தடைவிதித்து இருக்கிறார்கள் கல்வித்துறை அதிகாரிகள்.தென்கொரிய அரசு மாணவர்களின் நலன் மற்றும் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.
அதிகமாக காபி அருந்துவதால் தூக்கமின்மை, மயக்கம் அதிகரிப்பதாகவும், இதயத்துடிப்பு, நரம்புத்தளர்ச்சி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, பள்ளிகளில் காபி விற்பனையைத் தடைசெய்துள்ளது தென்கொரியா.
தென்கொரியாவில் உள்ள ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தின்பண்டங்களுடன் காபி விற்பனைசெய்யக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்கள்.மேலும் மாணவர்களின் உடல்நிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்தவிதமான உணவு பொருட்களையும் விற்க கூடாது என கண்டிப்பான உத்தரவை கல்வித்துறை அதிகாரிகள் பிறப்பித்துள்ளார்கள்.