'நேர்மையாக விளையாடவே தென் இந்தியா என்னை தயார் படுத்தியது' .. இது ‘தல’ பஞ்ச்!

Home > தமிழ் news
By |
'நேர்மையாக விளையாடவே தென் இந்தியா என்னை தயார் படுத்தியது' .. இது ‘தல’ பஞ்ச்!

தான் விளையாடும் கிரிக்கெட்டில் தன்னை நேர்மையாக விளையாடுவதற்கே மேலும் கற்றுக்கொடுத்து தென் இந்தியா தயார் படுத்தியதாக இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான ‘தல’ தோனி கூறியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட "Coffee Table Book"  என்கிற புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவருமான என்.சீனிவாசன் தனது 50 வருட அனுபவங்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்த புத்தகத்தின் முதல் பிரதியை மகேந்திரசிங் தோனி பெற்றுக்கொண்டுள்ளார். 

 

கிரிக்கெட் பிரபலம் ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் பங்குபெற்ற இவ்விழாவில் பேசிய தோனி, ‘நேர்மையான கிரிக்கெட்டை விளையாடவே தென் இந்தியா என்னை தயார்ப்படுத்தியது’ என்று கூறியுள்ளார். அடுத்து நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் இந்திய அணியின் தொடர் விளையாட்டு போட்டிகளில் பேட்ஸ்மேனாகவும் தோனி விளையாடவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

MSDHONI, TAMILNADU, CHENNAI, CSK