மாணவி சோபியா புலிகளின் ஆதரவாளர்: சுப்ரமணிய சுவாமி!

Home > தமிழ் news
By |
மாணவி சோபியா புலிகளின் ஆதரவாளர்: சுப்ரமணிய சுவாமி!

சோபியாவுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களும் தமிழக அரசியல் மற்றும் திரைப் பிரபலங்களிடம் இருந்து வந்துகொண்டிருக்கின்றன. முன்னதாக தமிழிசையை விமர்சித்த ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய தமிழிசை, மெட்ரோ ரயிலில் தனக்கு எதிராக கருத்து பேசியவரை அடித்தவர்தானே ஸ்டாலின் எனவும் பேசியிருந்தார்.

 

இதேபோல்,  பாஜக எம்.பி சுப்ரமணிய சுவாமி, கனடாவில் இருந்து வந்திருக்கும் தமிழக மாணவி சோபியா பாஜகவிற்கு எதிரான கருத்தினை பேசியிருப்பது அவர் விடுதலைப் புலிகளின் ஆதரவானவர் என்பதை குறிப்பதாக ட்வீட் செய்துள்ளார்.

 

ஆனால் உண்மையில், காங்கிரஸ்தான் விடுதலைப் புலிகளுடனான முரண்பாட்டில் இயங்கும் கட்சி என்கிற கருத்து நிலவி வருகிறது. அக்கட்சியுடன் கூட்டணி வைத்ததாலேயே திமுக-வும் தமிழகத்தில் விமர்சிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஆக, இந்த விஷயத்தில் பாஜகவும் காங்கிரசும் ஒத்துப்போவதாக சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

CONGRESS, BJP, TAMILISAISOUNDARARAJAN, SUBRAMANIYASWAMY, LTTE, SOPHIA