மகனின் தேர்வு தோல்வியை தந்தை விருந்து வைத்துக் கொண்டாடிய செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் (சாகர் மாவட்டம்) டிலி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுரேந்திரகுமார் வியாஸ். கட்டிட காண்ட்ராக்டிரான இவரது மகன் அன்சு 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார்.

 

இதன் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் அன்சு தோல்வி அடைந்தார். இதனால் தந்தை என்ன சொல்வாரோ என்ற பயத்துடன் வீட்டுக்கு வந்த அன்சு தந்தையிடம் தனது தோல்வி குறித்து தெரிவித்துள்ளார்.

 

ஆனால் சுரேந்திரகுமார் மகனைக் கட்டித்தழுவி அவனுக்கு இனிப்பு வழங்கியுள்ளார். மேலும், மகனின் தோல்வியை கொண்டாட முடிவு செய்த அவர்  இதற்காக அன்சுவுடன் படித்த மாணவர்கள், பக்கத்து வீட்டினர், உறவினர்கள் என பலரையும் தனது வீட்டுக்கு அழைத்தார். அங்கு இசை நிகழ்ச்சியுடன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி தடபுடல் விருந்தும் அளித்தார்.

 

இதுகுறித்து சுரேந்திரகுமார் கூறுகையில், "எனது மகன் கடுமையாக உழைத்து தேர்வு எழுதினான். ஆனாலும் தோல்வி அடைந்துள்ளான். இதனை நான் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. தேர்வில் தோல்வி அடையும் அனைத்து மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் நான் ஒரு வி‌ஷயத்தை சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

 

பள்ளியில் நடைபெறும் தேர்வு என்பது மாணவரின் கடைசி தேர்வு அல்ல. வாழ்க்கையில் தொடர்ந்து எத்தனையோ சந்தர்ப்பங்கள் வந்து கொண்டே இருக்கும். அதை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,'' என்றார்.

BY MANJULA | MAY 16, 2018 11:24 AM #TNSTATEBOARDCLASS10&12RESULTS #PLUS2RESULTS #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS