‘இவங்களோட அருமை இப்பத்தான் புரியுது’.. வேகப்பந்து வீச்சாளர் வேதனை!
Home > News Shots > newsஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் வார்னர் மற்றும் ஸ்மித் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாதது கவலை அளிப்பதாக ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியதாக கடந்த ஆண்டு அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டனாக இருந்த ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகிய இருவரும் கிரிக்கெட் விளையாட ஓர் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
அனுபவ வீரர்கள் இல்லாத இளம் வீரர்களைக் கொண்டு விளையாடிய ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் சொந்த மண்ணிலேயே தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியில் முன்னணி வீரர்கள் இல்லாதது குறித்து அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், ‘ஒவ்வொரு முறையும் ஸ்மித் பேட்டிங் செய்யும் போதும் சதம் அடிக்க முயற்சி செய்து எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியை கொடுப்பார். மார்கஸ் ஹேரிஸ், டிராவிஸ் ஹெட் போன்ற இளம் வீரர்களைக் கொண்டு பெரிய அளவில் ரன் சேர்க்க வாய்ப்பில்லை. இதனால் இளம் வீரர்களுக்கு சரியான வழிகாட்டுதலை அளிக்க ஸ்மித், வார்னர் போன்ற அனுபவ வீரர்களை அணியில் மீண்டும் சேர்க்க வேண்டும்’ என ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.