’ஸ்கூல் முடிந்ததும்’..புத்தகப்பைக்கு பதிலாக ’நாற்காலியை’ முதுகில் மாட்டிச்சென்ற சிறுவன்!

Home > தமிழ் news
By |
’ஸ்கூல் முடிந்ததும்’..புத்தகப்பைக்கு பதிலாக ’நாற்காலியை’ முதுகில் மாட்டிச்சென்ற சிறுவன்!

சிலநேரங்களில் மூக்குக் கண்ணாடி அணிந்தபடி மூக்குக் கண்ணாடியையும், ஹெல்மெட் அணிந்தபடி ஹெல்மெட்டையும் தேடியிருக்கும் விநோதம் எல்லாம் பலருக்கும் நடந்திருக்கும். அவ்வகையில் பள்ளிச் சிறுவன் ஒருவன்  தூக்க கலக்கத்தில், புத்தக பையை எடுத்துச் செல்வதற்கு பதிலாக, நாற்காலியை எடுத்துச் செல்லும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

 

பிலிப்பைன்ஸில் உள்ள புகழ்பெற்ற நகரம் கேவிட்டே. இந்த நகரத்தைச் சேர்ந்த 4 வயது பள்ளிச்சிறுவன், வீடியோவின் தொடக்கத்தில் வகுப்பறையில் அயர்ச்சியாக மேசையின் மீது தலைவைத்து உறங்கிக் கொண்டிருக்கிறான்.

 

ஏறக்குறைய அனைவரும் காலியாகிவிட்ட அந்த வகுப்பறைக்கு ஆசிரியர் வருகிறார். அங்கு தூங்கிக் கொண்டிருக்கும் அந்த சிறுவனை எழுப்பி பள்ளி முடிந்ததால் வீட்டுக்கு கிளம்ப சொல்கிறார். ஆனால் சிறுவன் எழுந்தவுடன், தூக்க கலக்கத்தில் தனக்கு அருகில் நாற்காலியில் இருந்த புத்தகப்பையை விட்டுவிட்டு, தனக்கு இடதுபக்கம் இருந்த நாற்காலியை எடுத்து  பின்புறமாக இருந்து கோர்ட்டு சூட்டு மாட்டுவது போல், புத்தக பை என நினைத்து மாட்டிக்கொண்டு செல்கிறான்.

 

பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் சிறுவனின் செயல் பலரது நாஸ்டால்ஜியையும் நினைவுபடுத்துவதால்  இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

SCHOOLSTUDENT, SCHOOLCHILD, SLEEPYBOY