வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடனான சந்திப்பு முடிந்து அமெரிக்கா திரும்பிய அதிபர் டிரம்ப், இனி நிம்மதியாகத் தூங்குங்கள் என அந்நாட்டு மக்களுக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஒரு நீண்ட பயணத்திற்குப் பின்னர், சற்று முன்னர் தான் தரையிறங்கினேன். நான் பதவியேற்ற நாளை விட தற்போது அனைவரும் பாதுகாப்பை உணர்வார்கள். இனி வடகொரியாவிடம் இருந்து எந்த அணு ஆயுத அச்சுறுத்தலும் இருக்காது. கிம் ஜாங் அன் உடனான சந்திப்பு சிறந்த அனுபவமாக இருந்தது. வடகொரியாவுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.

 

நான் அதிபராக பதவியேற்பதற்கு முன் வடகொரியா உடன் அமெரிக்கா போர் புரியும் என மக்கள் நினைத்தனர். வடகொரியா நமது மிகப்பெரிய அச்சுறுத்தல் என ஒபாமாவும் கூறியிருந்தார். இனி எதுவும் இல்லை,இன்று நன்றாக தூங்குங்கள்,'' என தெரிவித்துள்ளார்.

BY MANJULA | JUN 13, 2018 5:33 PM #AMERICA #DONALDTRUMP #NORTHKOREA #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS