தளபதி பாடல் வரியை 'படத்தலைப்பாக்கிய' சிவகார்த்திகேயன்?.. இயக்குநர் விளக்கம்!
Home > தமிழ் news
இயக்குநர் ராஜேஷின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.விஜய்,சமந்தா மற்றும் பலர் நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான தெறி படத்தில் இடம்பெற்ற 'ஜித்து ஜில்லாடி' பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்தநிலையில் தெறி படத்தில் இடம்பெற்ற, 'ஜித்து ஜில்லாடி' பாடல் வரியை சிவகார்த்திகேயன் படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
தற்போது படத்தின் இயக்குநர் ராஜேஷ் படத்தலைப்பு குறித்து விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர்,'' எஸ்கே 13 படத்தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கண்டிப்பாக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்,'' என தெரிவித்துள்ளார்.
VIJAY, NAYANTHARA, SIVAKARTHIKEYAN