BGM Biggest icon tamil cinema BNS Banner

'கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க'.. மருத்துவமனைக்கு நேரில் சென்ற சிவகார்த்திகேயன்!

Home > தமிழ் news
By |
'கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க'.. மருத்துவமனைக்கு நேரில் சென்ற சிவகார்த்திகேயன்!

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியூ வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனால் மருத்துவமனை வெளியே ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

 

சிகிச்சைக்கு கருணாநிதி ஒத்துழைப்பதாகவும், இன்னும் சில நாள்கள் அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் நேற்று முன்தினம் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய அரசியல் பிரபலங்களும், திரைப்பிரபலங்களும் காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று மதியம் காவேரி மருத்துவமனைக்கு வந்து மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரை சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும் மூத்த அரசியல் தலைவரான கருணாநிதி விரைவில் முழுநலம் பெறுவார் என்றும் சிவகார்த்திகேயன் நம்பிக்கை  தெரிவித்துள்ளார்.