Looks like you've blocked notifications!

சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் ஹைதராபாத் வாலிபரிடம், கணிணி மூலம் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தைக் காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஹைதராபாத்தைச் சேர்ந்த வாலிபரிடம் முகப்புத்தகத்தில் அறிமுகமான கிறிஸ்டைன் லீ வெட்பேக்ஸ் என்ற பெண், தான் சிங்கப்பூரைச் சேர்ந்தவர் என்றும் பல் மருத்துவமனையில் வேலை செய்வதாகவும் கூறி இனிமையாக பேசி வந்துள்ளார்.

 

ஒரு கட்டத்தில் வாலிபர், அந்த பெண்ணுக்கு தன்னுடைய புகைப்படத்தை அனுப்புவதும், அவருக்கு வீடியோ கால் செய்வதும் என அவர்களுடைய நட்பு வளர்ந்து வந்துள்ளது.

 

ஆனால், கடந்த  பத்து நாட்களுக்கு முன்பு, அந்த வாலிபரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கணிணி மூலம் மார்பிங் செய்யப்பட்டு தவறான முறையில் சித்தரிக்கப்பட்டு, அவருடைய செல்போனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

தொடர்ந்து வாலிபரை மிரட்டிய கிறிஸ்டைன், பணம் தராவிட்டால் புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என கூறியுள்ளார். மிரட்டலுக்கு பயந்து அந்த வாலிபரும், ரூபாய் 30,000-ஐ அந்த பெண்ணுக்கு அனுப்பியுள்ளார்.

 

மனஅழுத்ததில் இருந்த வாலிபரை கண்ட பெற்றோர்கள் விசாரித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்க்கு வந்துள்ளது. தற்போது, இந்த வழக்கை சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

BY SATHEESH | APR 6, 2018 5:04 PM #SINGAPOREWOMANTRAPSHYDERABADMAN #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS