
செக்க சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து, அடுத்து வரிசையாக நான்கு படங்களை ஒப்புக்கொண்டிருப்பதாக சிம்பு அறிவித்தார். இதுதவிர இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்திலும் சிம்பு நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் நரேனின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. துருவங்கள் பதினாறு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், கார்த்திக் நரேனின் நரகாசூரன் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
இந்த நிலையில் கார்த்திக் நரேனின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக கூறப்படுவது, அவரது ரசிகர்களின் உற்சாகத்தை அதிகப்படுத்தி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 90 எம்எல்-லுக்காக 'சிம்புவுடன்' கைகோர்த்த ஓவியா
- வெளியானது 'சிம்பு-விஜய் சேதுபதி- மணிரத்னம்' பட தலைப்பு
- மணிரத்னம்-சிம்பு-விஜய் சேதுபதி படத்தில் இணையும் 'பிரபல' நடிகை