எத்தியுடன் 3-வது முறையாக.. கைகோர்க்கும் பிரபல இயக்குநர்!
Home > தமிழ் news
சமீபத்தில் வெளியான 'செக்க சிவந்த வானம்' படத்தில்,தனது இயல்பான நடிப்பால் சிம்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தார்.
இந்தநிலையில் இயக்குநர் கவுதம் மேனனுடன், சிம்பு மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக கவுதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களில் சிம்பு நடித்திருந்தார். இதனால் இப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2-வது பாகமாக உருவாகிறதா? இல்லை புதிய கதைக்களமா என்ற விவரங்கள் சஸ்பென்ஸ் ஆக உள்ளது.எனினும் இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SIMBU, GAUTHAMMENON, CCV