மஹத் போல சென்றாயனையும் 'வரவேற்று' பரிசளித்த சிம்பு!

Home > தமிழ் news
By |
மஹத் போல சென்றாயனையும் 'வரவேற்று' பரிசளித்த சிம்பு!

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட சென்றாயன் நடிகர் சிம்புவை சந்தித்து அவரிடம் பரிசு பெற்றுள்ளார்.இதுதொடர்பாக மஹத் வெளியிட்டுள்ள பதிவில், ''என்னுடைய சிறந்த நண்பன், தலைவன் எஸ்டிஆர் சென்றாயனை வரவேற்று,வாழ்த்தினார்,'' என தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து திருமூலர் எழுதிய திருமந்திரம் என்னும் புத்தகத்தையும் சிம்பு, சென்றாயனுக்கு பரிசாக அளித்துள்ளார். கடந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஹரிஷ் கல்யாணுக்கும் இதேபோல புத்தகம் ஒன்றை சிம்பு பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்கது.