Looks like you've blocked notifications!

ஆட்டிசம் குறைபாடு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஏப்ரல் 2ம் நாள் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு சப்தம் ஒரே டெசிபலில் பிரித்துணர முடியாத அளவில் ஒட்டுமொத்தமாகக் காதில் கேட்கும்.  எந்த ஒலி எதற்கானது என்று பிரித்தறிவதில் குழப்பம் ஏற்படும்.

 

அந்த எரிச்சல்தான்  அவர்களை சாதாரண மனிதர்களைப் போல் கடந்து செல்ல முடியாமல் செய்துவிடுகிறது.

 

எனவே, இது ஒரு குறைபாடுதானே தவிர  நோயல்ல. மேலும் சரியான கவனிப்பு மற்றும் முறையான பயிற்சிகளின் மூலம் பாதிப்புக்குள்ளானவர்களை இயல்பானவர்களாக மாற்ற முடியும்.

 

உண்மை இவ்வாறு இருக்க, இதனை உலகிற்கு தெரியபடுத்தும் வகையில் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவனின் வாழ்க்கை குறும்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

 

ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளான சிறப்புக் குழந்தைகளுடன் கிட்டத்தட்ட 20  வருடங்களாக தனது நேரத்தை செலவிட்டு வரும் திருமதி ராதா என்பவர் தயாரிக்க, மணி என்பவர் இயக்கி உள்ள இந்த படத்திற்கு 'பேரன்புடன்' என பெயரிடப்பட்டுள்ளது.

 

சாலிகிராமம் பிரசாத் லேபில்  நடைபெற்ற  இந்த குறும்படம் திரையிடல் விழாவில்,  இயக்குநர் வசந்த் மற்றும் பின்னணி பாடகி சைந்தவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

BY SATHEESH | APR 4, 2018 11:21 PM #SHORTFILM #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS