அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா நடிப்பில் உருவாகியிருக்கும் தமிழ்படம் 2 படத்தின் அறிமுகப்பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். அதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரையும் கலாய்ப்பது போல பாடல் வரிகள் அமைந்துள்ளன.

 

வரலாம் வரலாம் வா பைரவா என்றும், என் உயிர் மூச்சு சங்கம் டா மண்டபம் கட்டிட்டு தான் கல்யாணம் என்றும் சிவா பாடுவது போல வரிகள் உள்ளன.மேலும் எனக்கு சங்கம் இல்ல, பதவி ஆசை இல்ல மன்றத்தை எல்லாம் கலைச்சிட்டேன் என்றும் வரிகள் உள்ளன.

 

இது தானா சேர்ந்த கூட்டம் இல்லடா மொத்தமா ஜூனியர் ஆர்டிஸ்ட் என்றும், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கலாய்த்துள்ளனர். இதுதவிர எனக்கு நடிக்கத் தெரியாதுங்க என சிவா கூறுவது போலவும் காட்சிகள் உள்ளன.

 

பாடலின் இறுதியில் படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் சைக்கிளில் வருவது போலவும், என் தயாரிப்பாளருக்கு காரே இல்ல டா என சிவா பாடுவது போலவும் காட்சிகள் உள்ளன.இதனால் ஒரு பாடலுக்கே இப்படி என்றால் மொத்த படத்திலும் இன்னும் எவ்வளவு காட்சிகள் இருக்குமோ என, ரசிகர்கள் இப்படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டுள்ளனர்.

BY BEHINDWOODS NEWS BUREAU | JUN 26, 2018 7:29 PM #TAMIZHPADAM2 #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS