BGM BNS Banner

'காபாவில் கலக்கிய கபார்'....கோலியை பின்னுக்குத்தள்ளி முதலிடம்!

Home > தமிழ் news
By |
'காபாவில் கலக்கிய கபார்'....கோலியை பின்னுக்குத்தள்ளி முதலிடம்!

ஒரு ஆண்டில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் பட்டியலில் கோலியை பின்னுக்குத்தள்ளி, முதலிடம் பிடித்துள்ளார்,இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிக்கர் தவான்.

 

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டி20, 4 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.இதன் முதல் டி20 போட்டியானது நேற்று பிரிஸ்பைன் நகரிலுள்ள காபா மைதானத்தில் நடந்தது.டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள்,அதிரடியாக விளையாடி ரன் மழை பொழிந்தார்கள். இடையில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது.

 

இந்நிலையில் இந்திய அணிக்கு டக்வொர்த் லூவிஸ் முறையில் 17 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் சரிய,தவான் 42 பந்துகளில் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

 

பின்னர் வந்த வீரர்களில் தினேஷ் கார்த்திக் 13 பந்துகளில் 30 ரன்களும், ரிஷாப் பண்ட் 15 பந்துகளில் 20 ரன்களும் சேர்த்து அணியை வெற்றியை நோக்கி அணியை அழைத்து சென்றார்கள்.இருப்பினும் அவர்களும்  கடைசி ஓவர்களில் அடுத்தடுத்துதங்கள் விக்கெட்டை பறிகொடுத்ததால், இந்திய அணி 17 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 169 ரன்களை மட்டும் குவித்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

 

இதனிடையே இந்தப் போட்டியில் 76 ரன்கள் சேர்த்ததன் மூலம் டி20 போட்டிகளில் ஒரு ஆண்டில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில், கோலியை இரண்டாம் இடத்திற்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார் அதிரடி ஆட்டக்காரர் ஷிக்கர் தவான்.

BCCI, CRICKET, VIRATKOHLI, SHIKHAR DHAWAN