பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், மகளுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து இருந்தார். அதில் ஒரு புகைப்படத்தில் அவரின் மகளுக்குப் பின் சிங்கமொன்று படுத்துக் கிடந்தது.

 

இதனைக்கண்ட ரசிகர்கள் நிஜமாக வீட்டில் சிங்கம் வளர்க்கிறீர்களா?, வீட்டில் குழந்தைகளுடன் பழக விடாதீர் என, அப்ரிடியிடம் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து சிங்கத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்து தான் வீட்டில் சிங்கம் வளர்ப்பது உண்மைதான் என அப்ரிடி உறுதி செய்துள்ளார்.

 

அப்ரிடியை அந்நாட்டு ரசிகர்கள் 'பாகிஸ்தான் லயன்' என்று செல்லமாக அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

BY MANJULA | JUN 11, 2018 1:48 PM #PAKISTAN #CRICKET #SHAKIDAFRIDI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS