ரயில்களில் செல்பி எடுப்பது, தண்டவாளங்களில் செல்பி எடுப்பது ஆகியவற்றால் உயிரிழப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. ட்ரெயின்களில் அடிபட்டு இறப்பவர்களை விட தண்டவாளத்தில் செல்பி எடுத்து இறந்து போகிறவர்கள் தான் அதிகம்.

 

இந்த நிலையில் ரயில் நிலையங்களில் செல்பி எடுப்பவர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரயில் நிலையங்கள், ரயில் நிலைய வளாகம், ரயில்வே நடைமேடை, ரயில் படிக்கட்டுகள் ஆகியவற்றில் இருந்து செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மீறி செல்பி எடுப்பவர்களுக்கு மேலே சொன்ன அபராதம் விதிக்கப்படும்.

 

மேலும் ரயில்வே வளாகத்தில் குப்பைத்தொட்டியில் குப்பைகளைப் போடாமல் கீழே போடுபவர்களுக்கு, ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் அமலுக்கு வரும் இத்திட்டத்தைக் கண்காணிக்க ரயில்வே நிர்வாகம் ஊழியர்களை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

BY MANJULA | JUN 22, 2018 11:32 AM #INDIANRAILWAYS #RAILWAY #SELFIE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS