ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
Home > தமிழ் newsராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு ஏற்கனவே தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இவர்களில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தூக்கு தண்டனை கொடுக்கப்பட்ட மூன்று பேரும் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பி தங்களின் தண்டனைக் காலத்தை மரண தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கச் சொல்லி கோரியிருந்தனர்.
ஆனாலும் இத்தனை ஆண்டுகாலத்தில் இந்த கைதிகள் இரட்டை ஆயுள் தண்டனையையே கழித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட மூவரையும் விடுவிப்பதற்கான கோரிக்கையை மத்திய அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மரண தண்டனையை நீக்கி, விடுவிப்பது பற்றி மத்திய அரசு மீண்டும் பரிசீலிக்க உத்தரவிட்டது.