அரசு சேவைகளுக்கு கட்டாயம்..வங்கி-பள்ளி-சிம் கார்டுகளுக்கு?: உச்சநீதிமன்ற தீர்ப்பு!
Home > தமிழ் newsஆதாரை கட்டாயமாக்கக்கூடாது என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துவந்த நிலையில் ஆதார் செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று அதற்கான தீர்வினை தீர்ப்பாக வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன்படி, அரசு சேவைகளை பெற ஆதார் கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்க்கைக்கான நீட் தேர்வு மற்றும் செல்போன் சிம் பெறுவதற்கு ஆதார் கட்டாயமில்லை என்றும், இதே போல் வங்கி சேவை பெறுவதற்கும் ஆதார் கட்டாயமில்லை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆதாருக்கான சட்ட விதிகளை இன்னும் கடுமையாக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் ஆதாரை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
AADHAAR, SUPREME COURT, ARJAN KUMAR SIKRI, INDIA, INDIANGOVERNMENT, GOVTOFINDIA