ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'வனமகன்' படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் சாயிஷா சைஹல். தற்போது கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்', ஆர்யாவுடன் 'கஜினிகாந்த்' மற்றும் விஜய் சேதுபதியுடன் 'ஜூங்கா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

 

சாயிஷா மிகவும் நன்றாக நடனம் ஆடுவார் என கோலிவுட்டில் பலரும் இவரது நடனத்தைப் பாராட்டியுள்ளனர். அதனை நிரூபிப்பது போல 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம்பெற்ற 'சொடக்கு மேல சொடக்கு' பாடலுக்கு சாயிஷா நடனமாடி அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

டிவிட்டரில் தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில்,சாயிஷாவின் நடனத்தைப் பார்த்த பலரும் அவரைப் புகழ்ந்து வருகின்றனர்.

 

BY MANJULA | JUN 11, 2018 10:52 AM #SURIYA #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS