'தீபாவளி போனஸாக' 600 சொகுசு கார்கள், வைர நகைகள், வீடுகளை.. பரிசாக வழங்கிய வைர வியாபாரி!

Home > தமிழ் news
By |
'தீபாவளி போனஸாக' 600 சொகுசு கார்கள், வைர நகைகள், வீடுகளை.. பரிசாக வழங்கிய வைர வியாபாரி!

தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 600 கார்கள், வைர நகைகள், வீடுகள் மற்றும் நிதி சேமிப்பு பத்திரங்களை வைர வியாபாரி ஒருவர் 'போனஸாக' அள்ளி வழங்கியுள்ளார்.

 

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி சவ்ஜி தோலக்கியா வைரங்களை பட்டை தீட்டி 50-க்கும் அதிகமான வெளிநாடுகளுக்கு வைரங்களை ஏற்றுமதி செய்து வருகிறார்.இவரது நிறுவனத்தில் சுமார் 5500 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 1984-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இவரது நிறுவனத்தின் சொத்து மதிப்பு தற்போது 6000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.


கடந்த 2014-ம் ஆண்டு முதல் தனது 'ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்' நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வீடுகள், கார்களை தீபாவளி போனஸாக சவ்ஜி வழங்கி வருகிறார். அந்தவகையில் இந்த வருடம் தனது நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 600 ஊழியர்களுக்கு 'Skill India Incentice Ceremony' என்ற பெயரில் விழாவொன்றை நடத்தி, 600 சொகுசு கார்கள், வைர நகைகள், வீடுகள் ஆகியவற்றை ஊழியர்களுக்கு  பரிசாக வழங்கியிருக்கிறார்.

 

நேற்று(25.10.18) நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் வழியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 4 ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக கார் சாவியை வழங்கினார்.

 

முன்னதாக இதுகுறித்து தனது பேஸ்புக் பதிவில் சவ்ஜி,'' இந்த ஆண்டு ஊழியர்கள், இன்ஜினீயர்கள் உட்பட 1700 பேருக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படும்,'' என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

NARENDRAMODI, SAVJIDHOLAKIA, SURAT, DIWALI2018