'சிட்னி மைதானத்தில் ஒலித்த தமிழர்கள் குரல்'...சல்யூட் போட வைத்த இளைஞர்கள்!
Home > தமிழ் newsஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியின் போது,கஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளை காப்பாற்றுங்கள் என பதாகைகளுடன் தமிழர்கள் வந்திருந்தனர்.இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
சிட்னி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதிய கடைசி டி20 போட்டியானது நடைபெற்றது.இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு,தொடரை 1-1 என சமன் செய்தது. இந்நிலையில் இந்த போட்டியினை காண சிட்னி மைதானத்திற்கு வந்திருந்த ரசிகர்கள் சிலர் “Save Delta, Save Tamil Nadu Farmers, Gaja Cyclone Relief” என்ற எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறு நின்றுகொண்டிருந்தனர். இவர்கள் ஆஸ்திரேலிய வாழ் தமிழர்கள் என கருதப்படுகிறது.
கஜா புயலினால் டெல்டா விவசாயிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு போதுமான நிவாரணம் கிடைக்கும் வகையில்,சர்வதேச கவனத்தை பெறுவதற்காக,இளைஞர்கள் பதாகைகளை ஏந்தியவாறு நின்றிருக்கலாம் என கருதப்படுகிறது.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.