சபரிமலை கலவரம்:சங் பரிவார் மற்றும் ஆர்.எஸ்.எஸ் பின்புலங்களாக இருக்கலாம்.. பினராய் விஜயன் ட்வீட்!
Home > தமிழ் news
சபரிமலை வழக்கில் அனைத்து வயது பெண்களும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதற்கு இருந்த தடை நீக்கப்பட்டதை அடுத்து, கோயில் நடை திறக்கப்பட்டதோடு பக்தர்களின் பூஜையும் தொடங்கியது.
எனினும் போராட்டக்காரர்களின் போராட்டம் கலவரமாக மாறியதில் பத்திரிகையாளர்கள், காவலர்கள், பெண்கள் என 30க்கும் மேற்பட்டோர் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் பற்றி, கேரள முதல்வர் பினராய் விஜயன், ‘பம்பை மற்றும் சபரிமலை பகுதியில் மலைவாழ் மக்களே உள்ளனர். ஆக இந்த கலவரத் தாக்குதல்களில் மதவாதிகளின் செயல் தனித்து தெரிவதாகவும் இதனை சங் பரிவார் மற்றும் ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட அமைப்புகளின் ஆதரவுகொண்டவர்கள்தான் செய்திருக்க வேண்டும்’ என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.