'இந்தியாவிற்கு கடத்தல் பொருட்களை'விற்பனை செய்து...சிக்கிய 'பிரபல கிரிக்கெட் வீரர்'!
Home > தமிழ் newsஇந்தியாவிற்கு அழுகிய பாக்குகளை திருட்டுத்தனமாக விற்பனை செய்ததாக இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா மீது புகார் எழுந்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரர் சனத் ஜெயசூர்யா.இவர் இலங்கை அணிக்காக 110 டெஸ்ட் (6973 ரன்கள்), 445 ஒருநாள் (13430 ரன்கள்), 31 டி-20 (629 ரன்கள்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.கிரிக்கெடிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு கடந்த 2012ல்,ஜெயசூர்யா இலங்கை அரசியலில் நுழைந்தார்.
மேலும் கடந்த 2013ல் இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுத்தலைவராக ஜெயசூர்யாநியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து 2014ல் டி-20 உலகக்கோப்பை, ஆசிய கோப்பை, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட், ஒருநாள், டி-20 என அனைத்திலும் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் ஜெயசூர்யா தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவுக் குழுவும் அவர் மீது ஊழல் புகார் கூறியிருந்தது.இந்நிலையில் ஜெயசூர்யா தனது புகழை பயன்படுத்தி, அழுகிய பாக்குகளை இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டவை என போலியான ஆவணங்களை தயார் செய்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சமீபத்தில் வருவாய்த்துறையினர் பல லட்சம் மதிப்புள்ள பாக்குகளை நாக்பூரில் பறிமுதல் செய்தார்கள்.அதை வைத்திருந்த தொழிலதிபரிடம் வருவாய்துறையினர் விசாரணை மேற்கொண்டார்கள்.அதில் இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யாவிடம் இருந்து பாக்குகளை வாங்கியதாக தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து இலங்கை அரசுக்கு இது தொடர்பாக ஜெயசூர்யா, மற்றும் மேலும் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் வரும் டிசம்பர் 2ல் மும்பையில் நடக்கும் விசாரணையில் பங்கேற்க உத்தரவிட, வருவாய்துறையினர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பாக்குகள் இந்தோனேஷியாவில் இருந்து இந்தியாவுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்தால், 108 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும். ஆனால் இலங்கையும் இந்தியாவும் தெற்காசிய பகுதிக்குள் இருப்பதால்,பொருட்களை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்தால்,108 சதவீத இறக்குமதி வரி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.இதனால் 100 கோடி மதிப்பிலான இந்த பாக்குகளை வெறும் 25 கோடிக்கு நாக்பூர் தொழிலதிபர் இறக்குமதி செய்துள்ளார்.
இதனையடுத்து நல்ல பாக்குகளுடன் இறக்குமதி செய்யப்பட்ட அழுகிய பாக்குகளை கலந்து,இந்தியாவில் விற்பனை செய்ய தொழிலதிபர் திட்டமிட்டது தெரியவந்துள்ளது.இந்நிலையில் வருவாய்துறையினரின் விசாரணைக்கு,கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா மற்றும் இரு வீரர்களை இலங்கை அரசு விசாரணைக்கு அனுப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.