‘கிரிக்கெட்டில் ஏபிசிடியை கற்றுத் தந்தவர்’.. ஆசானை சுமந்து சென்ற சச்சின்!

Home > தமிழ் news
By |
‘கிரிக்கெட்டில் ஏபிசிடியை கற்றுத் தந்தவர்’.. ஆசானை சுமந்து சென்ற சச்சின்!

இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். அவரை போல் பல ஜாம்பவான்களை உருவாக்கிய கிங் மேக்கர் ராம்காந்த் அச்ரேக்கரின் மரணம் கிரிக்கெட் உலகை உலுக்கியுள்ளது.


87 வயதில் இயற்கை எய்தியுள்ள ராம்காந்த் அச்ரேக்கர் 1932ல் பிறந்தவர். இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளித்ததன் விளைவாக துரோணாச்சாரியார் விருது போன்ற உயரிய விருதுகளை பெற்றவர். இந்நிலையில் நேற்று (ஜனவரி 02, 2019) இயற்கை மரணம் அடைந்துள்ளார். அவருக்கு இந்திய கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகம் மட்டுமல்லாது, இந்திய அரசு சார்பிலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.


தனது பயிற்சியாளர் ராம்காந்த் அச்ரேக்கர் பற்றி இந்திய கிரிக்கெட் பிரபலம் சச்சின் டெண்டுல்கர் தனது ட்வீட்டில், கிரிக்கெட் எனும் சொர்க்கத்தில் அவரும் அவருடன் தாங்களும் வாழ்ந்தததாக கூறியதோடு, அவர் எங்கிருந்தாலும் தங்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். மேலும் கிரிக்கெட்டின் ஏபிசிடியை அவரிடம் கற்றதில், தான் முதல்கொண்டு பலரும் அவரது மாணவர்கள் என்று அவர் கூறினார். மேலும் ராம்காந்த் அச்ரேக்கரின் இறுதி அஞ்சலியில் பங்கேற்ர சச்சின் அவரது பூத உடலை சுமந்து சென்றார்.

RAMAKANTACHREKER, SACHINTENDULKAR, CRICKET, INDIA, COACH