தீர்ப்புக்கு பிறகு, சபரிமலை கோவிலின் முதல் நடைதிறப்பு தேதி அறிவிப்பு!

Home > தமிழ் news
By |
தீர்ப்புக்கு பிறகு, சபரிமலை கோவிலின் முதல் நடைதிறப்பு தேதி அறிவிப்பு!

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்கிற உத்தரவும் அண்மையில் உச்சநீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது. பலரின் ஆதரவுக் கருத்துக்கள் இந்த தீர்ப்புக்கு இருந்தாலும், மரபு வழியாக இருந்த இந்த முறை, சிலரது நம்பிக்கைகளை உடைத்துவிட்டதாகவும் பலர் அதிருப்தி அடைந்தனர். ஆனால் கேரள முதல்வர் பினராய்  விஜயனும், சபரிமலை தேவசம் போர்டும் கூறும்பொழுது, ‘இந்த தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு அளிக்கப்படப் போவதில்லை. கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள்’ என்றனர்.


இந்த நிலையில் வருகிற 17-ம் தேதி சபரிமலை கோவிலின் நடை திறக்கப்படவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐப்பசி மாத பூஜைக்காக வரும் 17-ம் தேதி அன்று திறக்கப்படவுள்ள கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை, அன்றைய தினம் மாலை ஐந்து மணிக்கு திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதணை போன்ற வழக்கமான சடங்குகள் நிகழவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை தீர்ப்புக்கு பிறகு முதல் நடைதிறப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

SABARIMALAVERDICT, LORDAIYYAPPANTEMPLE, SABARIMALATEMPLE, KERALA, RIGHTTOPRAY