'கண்ணை மறைத்த ஒருதலைக்காதல்'.. 6000 கிலோமீட்டர் பயணித்து சிறுமியைக் கொலை செய்த சிறுவன்!

Home > தமிழ் news
By |
'கண்ணை மறைத்த ஒருதலைக்காதல்'.. 6000 கிலோமீட்டர் பயணித்து சிறுமியைக் கொலை செய்த சிறுவன்!

16 வயது சிறுவன் 6276 கிலோமீட்டர்கள் பயணித்து, காதலை ஏற்க மறுத்த பெண்ணை கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ரஷ்யாவை சேர்ந்த கிரில் வொல்ஸ்கி என்ற 16 வயது சிறுவன், மாஸ்கோவைச் சேர்ந்த கிறிஸ்டினா என்ற 16 வயது சிறுமியுடன் ஆன்லைன் மூலம் பரிச்சயமாகி நட்புடன் பழகி வந்துள்ளான்.

 

கடந்த 2 மாதங்களுக்கு முன் கிறிஸ்டினா அவரது வீட்டில் இருந்து காணாமல் போய் இருக்கிறார். இதைத்தொடர்ந்து போலீசார் சிறுமியைத் தேடத்துவங்க கிரில்-கிறிஸ்டினா நட்பு அவர்களுக்கு தெரியவந்துள்ளது.

 

இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில்  கிரில்,கிறிஸ்டினாவை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால் கிறிஸ்டினா,கிரிலின் காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது பெற்றோர்களுக்குத் தெரியாமல் கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவில் இருந்து மாஸ்கோ வரை சுமார் 6276 கிலோமீட்டர் தூரம் பயணித்து, அந்த சிறுமியைக் கண்டுபிடித்து கிரில் கொலை செய்துள்ளான்.

 

மேலும் யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக கிறிஸ்டினாவின் உடலை கழிவுநீர்த்தொட்டியில்  , கிரில் மூழ்கடித்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது மாஸ்கோ போலீசார் கிரிலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவன் செய்த செயலுக்கு அவனுக்கு தண்டனை கிடைக்கட்டும் என அவனது அம்மா, கிரிலிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

FACEBOOK, MURDER, TWITTER, INSTAGRAM, RUSSIA, ONLINE