நடுவானில் நேருக்கு 'நேராக மோதிக்கொண்ட' ஹெலிகாப்டர்கள்.. 18 பேர் பலி!
Home > தமிழ் newsரஷ்யாவைச் சேர்ந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் நேருக்கு நேராக மோதிக்கொண்டதில்,18 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்யாவின் மாஸ்கோவை சேர்ந்த எம்ஐ-8 ரக ஹெலிகாப்டர் ஒன்று வடக்கு சைபீரியாவை சேர்ந்த எண்ணெய் வயலுக்கு புறப்பட்டு சென்றது. இதில் 3 ஊழியர்கள், 15 பயணிகள் என மொத்தம் 18 பேர் புறப்பட்டு சென்றனர்.
நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த ஹெலிகாப்டர் மீது மோதி, கீழே விழுந்து நொறுங்கியது.இந்த விபத்தில் 3 ஊழியர்கள், 15 பயணிகள் என 18 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான மற்றொரு ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
முறையான வானிலை, பாதுகாப்பு பரிசோதனைகள், போக்குவரத்து வரையறைகளை கடைபிடிக்காததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக அரசு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதே சமயம், ரஷ்ய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் இயல்பான வானிலையே நிலவியதாகவும், ஏர்கிராப்ட் நிறுவனத்தின் கவனக் குறைவால் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளது.