பாரத ஸ்டேட் வங்கி 'ஏடிஎம்'களில் .. இனி தினசரி இவ்வளவு 'பணம்தான்' எடுக்க முடியும்!

Home > தமிழ் news
By |
பாரத ஸ்டேட் வங்கி 'ஏடிஎம்'களில் .. இனி தினசரி இவ்வளவு 'பணம்தான்' எடுக்க முடியும்!

பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்களில் தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு 20,000 ஆயிரம் ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, கிளாசிக் மற்றும் மேஸ்ட்ரோ வகை ஏடிஎம். கார்டுகளுக்கான தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு 40,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது.  இந்த உத்தரவு நாளை முதல் (31-ம் தேதி0 நடைமுறைக்கு வருகிறது.

 

மின்னணுப் பரிமாற்றம், பணமில்லா வணிக நடவடிக்கை, ஏடிஎம்களில் நடைபெறும் மோசடி பணபரிவர்த்தனைகளை தடுக்கும் பொருட்டும், டிஜிட்டல் மற்றும் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக  பாரத ஸ்டேட் வங்கி இதற்கு விளக்கம் அளித்துள்ளது. 

 

கடந்த மாதம் வரை ஏடிஎம்-களில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு 40,000 ரூபாயாக இருந்தது. தற்போது அது 20,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

SBI, ATM, TAMILNADU, INDIA