டிவிட்டர்,இன்ஸ்டாகிராமில் 'தளபதியை' அன்-பாலோ செய்த ரோஹித் சர்மா...ரசிகர்கள் அதிர்ச்சி!

Home > தமிழ் news
By |
டிவிட்டர்,இன்ஸ்டாகிராமில் 'தளபதியை' அன்-பாலோ செய்த ரோஹித் சர்மா...ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா டிவிட்டர்,இன்ஸ்டாகிராமில் அன்-பாலோ செய்த விவகாரம், சமூக வலைதளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி  தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதைத்தொடர்ந்து ஆசிய கோப்பை விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது.இதில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால்,இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் விளையாடவுள்ளது.

 

இந்தநிலையில் கேப்டன் விராட் கோலியை டிவிட்டர்,இன்ஸ்டாகிராமில் ரோஹித் சர்மா அன்-பாலோ செய்துள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் என்னாச்சு ஹிட்மேன்? சமூக வலைதளங்களில் ரோஹித்திடம் கேட்க ஆரம்பித்துள்ளனர்.

 

டெஸ்ட் தொடரில் ரோஹித்துக்கு இடம் அளிக்கப்படாததால் இருவருக்கும் இடையில் உரசல் ஏற்பட்டுள்ளதாகத்,தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

VIRATKOHLI, ROHITSHARMA