'யாரவது அவர் கிட்ட சொல்லுங்கப்பா,இது டெஸ்ட் மேட்ச்னு'...அதிரடி வீரரை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!

Home > தமிழ் news
By |
'யாரவது அவர் கிட்ட சொல்லுங்கப்பா,இது டெஸ்ட் மேட்ச்னு'...அதிரடி வீரரை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணி,கோப்பையை வெல்லும் நோக்கில் இன்று,முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது.‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பேட்டிங்கை ’ தேர்வு செய்தார்.

 

டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவில் ஜொலிக்காத ரோஹித் சர்மா,இம்முறை 12 பேர் கொண்ட இந்திய அணி பட்டியலில் இடம் பெற்றிருந்தார்.இதனால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன்,ரோஹித் சர்மாவின் அதிரடிக்காக காத்திருந்தனர்.

 

சற்று நிதானமாக  தனது இன்னிங்ஸ்ஸை தொடங்கிய ரோஹித் மூன்று சிக்ஸர்கள் அடித்து தனது அதிரடியை தொடங்கினர்.ஆனால் இந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட  நீடிக்கவில்லை.லியோனின் பந்தில் சிக்ஸர் அடித்த ரோஹித்,அதற்கு அடுத்த பந்தில் மார்கஸ் ஹாரிஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.61 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் 37 ரன்களை சேர்த்தார்.

 

இதனால் கடுப்பான நெட்டிசன்கள்,ரோஹித் சர்மாவை கடுமையாக கலாய்த்து வருகிறார்கள்.

CRICKET, BCCI, ROHIT SHARMA, INDIA VS AUSTRALIA, ADELAIDE