"டெஸ்ட் போட்டிகளில் ஜொலிக்கவில்லை" ஆனால்... 'சேவாக் போல இருவரும் ரொம்ப ஆபத்தானவர்':கவாஸ்கர்!

Home > தமிழ் news
By |
"டெஸ்ட் போட்டிகளில் ஜொலிக்கவில்லை" ஆனால்... 'சேவாக் போல இருவரும் ரொம்ப ஆபத்தானவர்':கவாஸ்கர்!

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரரான  ரோகித் சர்மா ஒரு நாள் போட்டி ,டி-20 ஆகிய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அவரால் ஜொலிக்க முடியவில்லை,இருப்பினும் சேவாக் போல பேட்டிங்கில் அவரும் ஆபத்தானவர் என முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

ரோஹித் ஷர்மா  இந்திய கிரிக்கெட் அணிக்காக 193 ஒருநாள் (7454 ரன்கள்), 87 டி-20 (2207 ரன்கள்) விளையாடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில்  இரட்டை சதம் அடிப்பது சாத்தியமில்லை என கருதப்பட்ட நிலையில்,மூன்று முறை (264, 209, 208*) அசால்ட்டாக அரங்கேற்றியவர்.

 

இவ்வளவு சாதனைகள் செய்த ரோஹிதால் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் சாதிக்க முடியவில்லை.இதுவரை 25 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ரோஹித் 1479 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.இதனால்,இவருக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட திறமை இல்லை என முத்திரை குத்தப்பட்டது.

 

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் விவ் ரிச்சர்ட்ஸ், சேவாக் போல் ரோகித் சர்மாவும் அதிரடி காட்டுவதில் மிரட்டலான வீரர் என முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில்,‘டெஸ்ட் போட்டிகளில் ரிச்சர்ட்ஸ், சேவாக் போல் ரோகித் சர்மாவும் அதிரடியில் மிரட்டுவதில் சிறப்பான வீரர். சேவாக்கை  போலவே ஒருநாள் போட்டிகளில் ரொம்ப அசால்ட்டாக ரோகித் சர்மாவும் சிக்சர் அடிப்பார். அதனால் ரோகித்தால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விரைவில் சாதிப்பார் என கவாஸ்கர் கூறினார்.

CRICKET, BCCI, VIRENDHARSHEWAG, SUNIL GAVASKAR, ROHIT SHARMA