பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை அட்ஜஸ்ட்மெண்ட்க்கு அழைத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


போலீசாரின் விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கை தற்போது விசாரித்து வருகின்றனர்.

 

நிர்மலா தேவி சம்பந்தப்பட்ட ஆவணங்கள், லேப்டாப், கம்ப்யூட்டர் ஹார்டிஸ்க், சிடிக்கள், செல்போன்கள் போன்றவற்றை போலீஸார் அவரது வீட்டிலிருந்து பறிமுதல் செய்துவிட்டனர். தொடர்ந்து விருதுநகர், அருப்புக்கோட்டை அத்திப்பட்டியில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவியின் வீடு அவர்  கைது செய்யப்பட்ட பின்னர் போலீஸாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்ட பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆவணங்கள் எதுவும் திருடப்பட்டுள்ளனவா? என்ற ரீதியில், விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பல பெரிய மனிதர்கள் இந்த வழக்கில் சிக்கி இருப்பதால் ஆவணங்களைத் திருடும் நோக்கில் பூட்டு உடைக்கப்பட்டதா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என, போலீசார் பலவகையிலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

மறுபுறம் இன்று விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிர்மலாதேவிக்கு, வருகிற 23-ம் தேதிவரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS