அடுத்த 'சூப்பர் ஸ்டார்' என கொண்டாடப்பட்ட வீரர்.. கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கிய துயரம்!
Home > தமிழ் newsஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்பட்ட வீரர், கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கிய துயர சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் அடுத்த வளரும் நட்சத்திரம் என விக்டோரியா பேட்ஸ்மென் வில் பியூகோவ்ஸ்கி புகழப்பட்டு வந்தார். சமீபத்தில் உள்நாட்டு கிரிக்கெட்டில் பிரமாதமான, வலுவான அணியான மேற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகக் கடந்த வாரம் பியூகோவ்ஸ்கி 243 ரன்களை விளாசினார்.
வெறும் 20 வயது வீரர் என்பதால் இவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணியில் மிக விரைவாக இவர் இடம் பிடிப்பார் என, அந்நாட்டு பத்திரிகைகள் எழுதின. மேலும் இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய அணியிலேயே பியூகோவ்ஸ்கி இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் துயரினை அளிக்கும் வகையில் பியூகோவ்ஸ்கி கால வரையன்றி கிரிக்கெட் வாழ்வினை விட்டு ஒதுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்து விக்டோரியா கிரிக்கெட் சங்கம்,''வில் பியூகோவ்ஸ்கி ஒரு அதியற்புத வீரர், இவருக்கு தற்போதைக்கு மன ரீதியான சிக்கல்கள் இருப்பதால் சிகிச்சை தேவைப்படுகிறது, ஆகவே அவர் காலவரையறையற்ற ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் திரும்புவார், அவருக்கு என்ன உதவி வேண்டுமோ அதனை கிரிக்கெட் விக்டோரியா மேற்கொள்ளும்,'' என அறிக்கை வெளியிட்டுள்ளது.