'இவங்களுக்கு எப்படி பௌலிங் போட்டாலும் அடிக்குறாங்களே'...'ஆஸ்திரேலிய மண்ணில் புதிய சாதனை படைத்த வீரர்'...600 ரன்களை கடந்த இந்தியா!
Home > தமிழ் newsஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில்,இந்திய வீரர் ரிஷப் பன்ட் சதம் அடித்து அசத்தியதோடு புதிய சாதனையையும் படைத்தார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி,தற்போது சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்து இருந்தது.
இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில்,150 ரன்களை கடந்த புஜாரா இந்தியாவின் ரன் ரேட் ஜெட் வேகத்தில் உயர காரணமாக அமைந்தார்.இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட புஜாரா,193 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.மேலும் இந்த தொடரில் 500 ரன்களையும் கடந்தார்.
தேநீர் இடைவேளையின் போது இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 491 ரன்கள் குவிந்திருந்தது.இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் 88 ரன்களுடனும்,ஜடேஜா 25 ரன்களுடனும் களத்தில் ஆடிக்கொண்டிருந்தனர்.இந்நிலையில் .தேநீர் இடைவேளைக்கு பின்பு சிறிது நேரத்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் சதம் அடித்து அசத்தினார்.
இது டெஸ்ட் போட்டிகளில் அவர் அடிக்கும் 2-வது சதமாகும்.மேலும் ஆஸ்திரேலியவிற்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் ரிஷப் பன்ட் படைத்தார்.இந்திய வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 500 ரன்களை கடந்து,சிறப்பாக ஆடி வருகிறது.