'எனக்கு எப்படி விளையாடணும்னு தெரியும்'...யாரும் சொல்லி தர வேண்டாம்...'டென்ஷன் ஆன இந்திய வீரர்'!

Home > News Shots > தமிழ் news
By |

உலகக்கோப்பை போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் அணியில் இடம்பிடிப்பது குறித்து வீரர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.வீரர்களின் உடல் திறன் குறித்தும் அதிகமாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

'எனக்கு எப்படி விளையாடணும்னு தெரியும்'...யாரும் சொல்லி தர வேண்டாம்...'டென்ஷன் ஆன இந்திய வீரர்'!

இந்நிலையில் என்னுடைய விளையாட்டு திறன் குறித்து எனக்கு தெரியும்,யாரும் சொல்லி தரவேண்டாம் என ரிஷப் பண்ட் சற்று காட்டமாக தெரிவித்துள்ளார்.முன்னாள் இந்திய கேப்டனும் அதிரடி விக்கெட் கீப்பருமான தோனி வரும் உலகக்கோப்பை முடிந்தவுடன் ஓய்வு பெற்று விடுவார் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.இதனால் அவரது இடத்திற்கு யார் அடுத்தது வருவார் என்ற விவாதம் தற்போதிருந்தே தொடங்கிவிட்டது.

குறிப்பாக வரும் உலககோப்பை போட்டியில் தோனிக்கு பேக்கப் விக்கெட் கீப்பராக யார் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.அவ்வாறு யார் இடம்பெறுகிறாரோ அவரே தோனிக்கு பின்பு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக நீடிக்க வாய்ப்பிருப்பதால்,தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே தன் மீதான விமர்சனங்களுக்கு கடுமையாக பதிலளித்துள்ளார் ரிஷப் பண்ட்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ''பேட்டிங், விக்கெட் கீப்பிங் என இரண்டிற்கும் நேரம் ஒதுக்கி நான் பயிற்சி மேற்கொள்கிறேன்.அதில் என்னுடைய முழு திறனை என்னால் வெளிப்படுத்த முடியும்.இந்திய ஏ அணியில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக விளையாடியதால்,இங்கிலாந்து ஆடுகளம் குறித்து எனக்கு தெரியும்.இங்கிலாந்தில் பந்து அதிகளவில் ஸ்விங் ஆகும் என்பதனை நான் நன்கு அறிவேன்.எனவே எங்கு எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து எனக்கு தெரியும் யாரும் சொல்லி தர வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

CRICKET, BCCI, MSDHONI, DINESHKARTHIK, RISHABH PANT, AUSTRALIA, WORLDCUP 2019