"சாலையில் பணத்தை வீசி எறியும் கோடீஸ்வரரின் மகன்"...ஓடிச்சென்று எடுக்கும் மக்கள்!
Home > News Shots > Lifestyle newsபணம் பத்தும் செய்யும் என்பார்கள்.ஆனால் பணம் என்பது காகிதம் மட்டுமே என்று பணத்தை சாலையில் வீசி எறிகிறார் ரஷ்யாவை சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவரின் மகன்.
ரஷ்யாவில் மிகப்பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரின் மகன், பணத்தை காற்றில் பறக்கவிடுவதையும், அதை ஓடிவந்து எடுப்பவர்களையும் வீடியோவாகப் எடுத்து அதை வெளியிட்டுள்ளார்.பணத்தை தான் வெறும் காகிதமாக பார்பதாகவும் அதன் மதிப்பை அதிகரிக்க மனிதன் தமது வாழ்வின் பெரும்பகுதியை இழக்கிறான் என்றும் கூறும் அந்த நபர், அவர்களைப் பார்த்து தாம் பரிதாபப்படுவதாகக் கூறுகிறார்.
செய்ன்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஓடும் காரின் ஜன்னலின் வழியாக,பணத்தை ஒவ்வொரு தாளாக சீட்டுக்கட்டை எறிவதைப் போல் வீசி எறிகிறார்.அவர் அவ்வாறு வீசி எறியும் பணத்தின் மதிப்பு சுமார் 56 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரபிள்ஸ் கரன்சிகள்.இது அந்நகரில் வாழும் ஒருவரின் சராசரி மாத சம்பளமாகக் கருதப்படுகிறது.
அதை காணும் சிலர் பணம் பறப்பதாகக் கூறி எடுத்துச் செல்கின்றனர். இதே நபர், மணலில் சிக்கிய தமது மெர்சிடஸ் எஸ் 500 கூப் ரக காரின் டயரில் பணத்தாள்களை போட்டு மீட்ட புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.