தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ’ரெட் அலர்ட்’ வாபஸ்: வானிலை ஆய்வு மையம்!
Home > தமிழ் newsதமிழகத்தில் விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வாபஸ் பெற்றுள்ளது. எனினும் நெல்லை குற்றால முதன்மை அருவி, ஐந்தருவி, தேனி கம்பம் அருகே உள்ள சுருளி அருவி, கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல, மகாரணமாகவும், பாதுகாப்பு கருதியும் வனத்துறை தடை செய்துள்ளனர்.
இந்நிலையில்தான் நீலகிரி, கோவை, குமரி மாவட்டங்களில் மட்டும் அதிதீவிர கனமழையும் மற்ற இடங்களில் லேசான அளவு மழை பொழியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் தென் பகுதிகளில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை வலுவிழந்துள்ளதால் ’7-ம் தேதி (ஞாயிறு) ரெட் அலர்ட் என்று கூறப்பட்ட எச்சரிக்கை அறிவிப்பை வாபஸ் பெறுவதாக சென்னை வானிலை ஆய்வு மண்டல இயக்குனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.