குப்பைக்கு வந்த "மேன் ஆப் தி மேட்ச் அட்டை "...கேள்விகளால் துளைத்து வரும் நெட்டிசன்கள்!

Home > தமிழ் news
By |
குப்பைக்கு வந்த "மேன் ஆப் தி மேட்ச் அட்டை "...கேள்விகளால் துளைத்து வரும் நெட்டிசன்கள்!

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில்,ஜடேஜாவிற்கு வழங்கப்பட  ஆட்ட நாயகன்  விருதிற்கான மாதிரி அட்டை குப்பை தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது,கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20  விளையாடி வந்தது.இதன் இறுதி போட்டியாக நேற்று சென்னையில் நடந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.இந்நிலையில் நவம்பர் 1 - தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் அபாரமாகப் பந்துவீசிய ஜடேஜா, 4 விக்கெட்டுகள் சாய்த்து ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜடேஜாவிற்கு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.அதற்கான மாதிரி அட்டையும் அப்போது வழங்கப்பட்டது.இது கிரிக்கெட் போட்டிகளில் நடக்கும் வழக்கமான நடைமுறையாகும்.ஆனால் அது தற்போது ஜெயன் என்னும் கேரளாவை சேர்ந்த  துப்புரவு தொழிலாளியிடம் உள்ளது.

 

போட்டிக்கு பின்பு அந்த அட்டையானது எப்படியோ குப்பை தொட்டிக்கு சென்று விட்டது.அதன்பிறகு துப்புரவு பணியினை மேற்கொண்ட  ஜெயனிடம் அந்த அட்டையானது சிக்கி இருக்கிறது.இந்நிலையில் 'ப்ரக்ருதி'  என்ற சுற்றுச்சூழல் அமைப்பின் முகநூல் பக்கத்தில்,ஜெயன் வைத்திருக்கும் ஆட்ட நாயகனிற்கு வழங்கப்பட ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையின் மாதிரி புகைப்படமானது பகிரப்பட்டு பல கேள்விகளும் கேட்கப்பட்டிருக்கிறது.

 

அதில் "போட்டியில் நன்றாக விளையாடியவர்களுக்கு  விருதுகள் வழங்கப்படுகிறது. ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகனுக்கான பரிசுத்தொகை விளம்பரத்துக்காக பிளாஸ்டிக் அட்டையில் காண்பிக்கப்படுகிறது. இதற்கு பிளாஸ்டிக் அல்லாத மாற்று வழியை ஏன் பி.சி.சி.ஐ யோசிக்க கூடாது.மேலும் பிளாஸ்டிக்கை தவிர்ப்பதர்கு பி.சி.சி.ஐயின் முதல் முயற்சியாக கூட இது இருக்கலாம் என தெரிவித்து,பி.சி.சி.ஐ, கேப்டன் கோலி, முன்னாள் கேப்டன் தோனி, ஆட்டநாயகன் விருதை வென்ற ஜடேஜா, கேரளா கிரிக்கெட் சங்கம் உள்ளிட்ட பலரை டேக் செய்துள்ளனர்.

 

இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது.மேலும் பிசிசிஐ மாற்று வழியில் வீரர்களை கௌரவிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என,பலரும் தங்களின் கருத்துக்களை  தெரிவித்து வருகிறார்கள்.

CRICKET, BCCI, RAVINDRA JADEJA, MAN OF THE MATCH CHEQUE, REPLICA, GARBAGE DUMP, THIRUVANANTHAPURAM ODI