ரஜினி மக்கள் மன்றத்தின் புதிய விதிமுறைகளை வெளியிட்ட ரஜினி!

Home > தமிழ் news
By |
ரஜினி மக்கள் மன்றத்தின் புதிய விதிமுறைகளை வெளியிட்ட ரஜினி!

நடிகரும் அரசியலாளருமான ரஜினி, தன் மக்கள் மன்றத்திற்கென தனிப்பட்ட விதிகள் சிலவற்றை உருவாக்கி புத்தகமாக வெளியிட்டுள்ளார்.  சாதி, மத சங்கங்கள் மற்றும் இதுபோன்ற அமைப்பு சார்ந்தவர்களுக்கு தன் மன்றத்தில் இடமில்லை என்று அறிவித்துள்ள ரஜினிகாந்த் மன்றத்தின் இளைஞரணிக்கென வயது வரம்பையும் நிர்ணயித்துள்ளார். 

 

அதன்படி ரஜினி மக்கள் மன்ற இளைஞரணியில் 35 வயதுக்குட்பட்டவர்களே இருக்க வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி என்றும் கூறியுள்ளார். 

 

மேலும், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தங்கள் வாகனங்களில் ரஜினி மக்கள் மன்றத்தின் கொடியினை நிரந்தரமாக வைக்க கூடாது என்றும் ரஜினி மக்கள் மன்ற நிகழ்ச்சிகளின்போது  மட்டும் கொடிகளை வைத்துவிட்டு பின்னர் அகற்றிவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

RAJINIKANTH, RAJINIMAKKALMANRAMNEWRULES, RAJNIS NEWRULES, RAJNIMAKKALMANRAM