"நீங்கள் என்ன எம்ஜிஆரா? இல்லை ஜெயலலிதாவா?.."முதல்வருக்கு ரஜினி கேள்வி!
Home > தமிழ் newsமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் அஞ்சலி சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த ஏராளமான நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
விழாவில் நடிகர் ரஜினி பேசும்போது,''கருணாநிதி இல்லாத தமிழகத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. 50 ஆண்டுகளாக கட்சியை கட்டிக்காத்தவர். எத்தனையோ வஞ்சனைகளை எதிர்கொண்டவர். மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக, தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்.
ஸ்டாலின் கடைசியில் குழந்தையைப் போல கண்ணீர் விட்டதை என்னால் தாங்க முடியவில்லை. கருணாநிதியுடன் பல நாட்களை நான் செலவழித்ததில் சந்தோஷம். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த ராகுல் காந்தி,பல மாநில முதல்வர்கள் என ஒட்டுமொத்த இந்தியாவே வந்தபோது முதலமைச்சர் அங்கு சென்றிருக்க வேண்டாமா? தமிழக அமைச்சரவையே அங்கு பங்கேற்றிருக்க வேண்டாமா? நீங்கள் என்ன எம்ஜிஆரா?இல்லை ஜெயலலிதாவா? ஏன் போகவில்லை,''.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.