அணியில் இடம்பிடிக்க பெண்களை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என, கிரிக்கெட் வீரர் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ராகுல் சர்மா, அம்மாநில கிரிக்கெட் சங்கத்தில் செல்வாக்கு மிக்க நபராகத் திகழும் அலீம் அக்ரம் சைபி பெண்களை ஏற்பாடு  செய்து தரக்கேட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டினை வெளியிட்டுள்ளார்.

 

அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் பெண்களை ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து வர வேண்டும் என்று அக்ரம் சைபி கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக ஒருசில ஆடியோக்களும் வெளியாகி பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டினை அக்ரம் மறுத்திருக்கிறார். இதுகுறித்து அவர், "விரைவில் உண்மை வெளிவரும். நான் ராஜீவ் சுக்லா போன்ற பெரிய மனிதர்களுடன் வேலை செய்கிறேன். அதனால், எல்லா மூலைகளிலிருந்தும் என் மீது பலர் தாக்குதல் நடத்துவது இயல்பு. இது எனக்கு நெருக்கமானவர்கள் உள்பட அதிருப்தியடைந்தவர்களால் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

 

இதற்கிடையில் கிரிக்கெட்டில் இதுபோன்ற ஊழல்கள் நிகழ்வது வெட்கக்கேடாக உள்ளது என்று, கிரிக்கெட் வீரர்கள் முகம்மது கைஃப், ஆர் பி சிங் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

BY MANJULA | JUL 19, 2018 6:50 PM #CRICKET #IPL #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS