நடப்பு ஐபிஎல் போட்டிகளில் பிளே ஃஆப் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணியும் தீவிரமாகப் போராடி வருகின்றன. அந்த வகையில் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்திய நம்பிக்கையோடு பலம்வாய்ந்த சிஎஸ்கே அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வருகின்ற வெள்ளிக்கிழமை எதிர்கொள்கிறது.
சிஎஸ்கேவுக்கு எதிரான இந்த ஆட்டத்தின் போது, பிங்க் உடன் மேலும் இரண்டு நிறங்கள் கலந்த உடையில் ராஜஸ்தான் அணி களமிறங்குகிறது. இந்த 3 வண்ணங்களும் மார்பகப் புற்றுநோய், வாய்ப்புற்றுநோய், செர்விக்கல் கேன்சர் ஆகியவற்றைக் குறிக்கிறது.
இதுகுறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே கூறுகையில், "ஒரு கிரிக்கெட் வீரராக புற்றுநோய் இல்லாத சமுதாயத்துக்கு இது ஒரு சிறிய ஆனால் முக்கியமான அடியாகும். விழிப்புணர்வை அதிகரிக்க எங்களால் முடிந்ததைச் செய்வோம்,'' எனத் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணி ஒவ்வொரு முறையும் பிங்க் சீருடையுடன் களமிறங்கி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த செண்டிமெண்ட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் கைகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Royals keep play-offs hopes alive
- 'என்ன ஒரு கேட்ச்'... யூசுப் பதானைப் புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!
- 'தோற்கத் தகுதியானவர்கள் தான் நாங்கள்'.. விரக்தியின் உச்சத்தில் விராட் கோலி!
- IPL 2018: RCB loses the nail-biting match against SRH
- Williamson-led SRH sets target, can RCB win the match?
- 'அஸ்வின்' இன்னொரு தோனியா? பிரபல கிரிக்கெட் வீரர் விளக்கம்!
- 'சில ஆண்டுகளுக்குப்பின் அவரின் சிறந்த பேட்டிங்கை பார்க்கிறேன்' தோனியைப் புகழ்ந்த பிரபலம்!
- Kings XI Punjab send Rajasthan Royals home packing
- Mumbai Indians one up against Kolkata Knight Riders
- ஐபிஎல்லில் 'அதிகம் பின்தொடரப்படும்' அணி இதுதான்!