அரசு ஊழியர்கள் ஜீன்ஸ்-டி-ஷர்ட் அணிந்து பணிக்குவரக்கூடாது என ராஜஸ்தான் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

இதுகுறித்து ராஜஸ்தான் மாநில நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தொழிலாளர் நலத்துறையில் பணியாற்றும் சில அதிகாரிகள், ஊழியர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் மற்றும் இதர அநாகரீகமான, கண்ணியக் குறைவான ஆடைகளை அணிந்து அலுவலகத்துக்கு வருகிறார்கள். பணிக்கு வரும் போது இது போன்ற உடைகளை அணிவதை ஊழியர்கள் தவிர்க்க வேண்டும். நாகரீகமான, கண்ணியமான உடைகளை அணிந்து ஊழியர்கள் பணிக்கு வரவேண்டும்,''என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது போன்று கட்டுப்பாடு விதிப்பதற்கு அரசு பணியாளர்களுக்கான விதிகளில் இடமில்லை. இந்த நடவடிக்கையை நாங்கள் ஜனநாயக முறையில் எதிர்ப்போம் என,ராஜஸ்தான் அரசின் இந்த உத்தரவுக்கு மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

சில மாதங்களுக்கு முன் கல்லூரி மாணவர்கள் ஜீன்ஸ்-டி-ஷர்ட் அணிந்து வரக்கூடாது என, அம்மாநில உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | JUN 28, 2018 11:53 AM #BJP #RAJASTHAN #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS