'வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி'...சென்னைக்கு என்ன அப்டேட்?...வானிலை மையம் தகவல்!
Home > தமிழ் newsதமிழகத்தின் உள்மாவட்டங்களில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததால்,படிப்படியாக மழை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மற்றும் வடக்கு தமிழக மாவட்டங்களில் நல்ல மழை பொழிவு இருந்தது. இந்நிலையில் இன்றைய மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் '‘நேற்று தமிழகத்தின் உள் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்துவிட்டது. மேலும் குமரிப் பகுதி முதல் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் வரை வளி மண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்தது. ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டில் 18 சென்டி மீட்டர் மழையும், மதுராந்தகத்தில் 14 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும்.23 மற்றும் 24 ஆம் தேதி முதல் படிப்படியாக மழை குறையும். மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் இல்லை. அவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லலாம்.சென்னையில் அக்டோபர் 1 முதல் இதுவரை 32 செமீ அளவு மழை பெய்துள்ளது. இது இயல்பாக பெய்யும் மழையை விட 44 %குறைவு, தமிழகம் மற்றும் புதுவையில் அக்டோபர் 1 முதல் இதுவரை பதிவான மழையின் அளவு 28 செ.மீ. இது 13 சதவீதம் இயல்பை விட குறைவு என்று கூறியுள்ளார்.