கேரளாவில் வெள்ளம் பாதித்த இடங்களை காணசெல்லும் ராகுல்காந்தி!
Home > தமிழ் newsகேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே பெய்து வந்த கனமழை, வெள்ளம் காரணமாக பல வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்படவும், உயிருடமைகளை இழக்கவும் செய்தனர்.
அண்டை மாநிலங்களில் இருந்து நிதிவரவுகள் இருந்ததோடு இந்திய பிரதமர் மோடியும் நிதி அளித்திருந்தார். மேலும் மத்திய அரசின் சார்பில் உதவிக்கென மீட்பு படைகளையும் அனுப்புவதாக அறிவித்தார். அதற்கும் முன்னரே கேரளாவில் எண்ணற்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் குவிந்து மக்களை ஆபத்துகளில் இருந்து உயிரைக் கொடுத்து மீட்டனர்.
கேரளாவில் இயல்புநிலை திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், மழை, வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிடுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை கேரளா செல்லவிருக்கிறார். அங்கு சென்று முழுநேரமாக மீட்பு பணிகளில் ஈடுபட்ட மீனவர்களையும், தனியார் தன்னார்வலர்களையும் சந்தித்து அறிய உள்ளதாக தெரிவித்துள்ளார்.