குப்பை பொறுக்குபவரின் மகன் தனது இடைவிடாத முயற்சியால், மருத்துவக்கல்லூரி மாணவராகி சாதனை படைத்துள்ளார்.

 

மத்திய பிரதேசத்தை சேர்ந்த அஷ்ரம் சவுத்திரி என்னும் மாணவருக்கு ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், " எனது பகுதியில் ஒரு மருத்துவர் இருந்தார். ஏழைகளுக்கு அவர் காட்டிய அன்பு தான் எனக்குள் மருத்துவராகும் எண்ணத்தை விதைத்தது,'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

 

இதுகுறித்து அவர் தந்தை கூறுகையில், " என் மகனுக்கு 12-ம் வகுப்பு முடித்ததும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால் படிக்க வைக்க வசதியில்லை. மற்றவர்களிடம் உதவி எதிர்பார்த்தோம். தற்போது கூடுதல் மருத்துவ ஆட்சியர் உள்ளிட்ட சிலர் எங்களுக்கு உதவி முன்வந்துள்ளனர். அவன் வருங்காலத்தில் சிறந்த மருத்துவராக வருவான்,'' என்றார்.

 


அஷ்ரமின் உழைப்பு குறித்து அவரது பக்கத்து வீட்டுக்காரர் கூறுகையில், " தந்தையின் வறுமை நிலையிலும், அவர் கஷ்டப்பட்டு படித்தார். எங்கள் கிராமத்தை சேர்ந்தவர் என்பதே எங்களுக்கு பெருமையாக உள்ளது,'' என தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

BY MANJULA | JUL 20, 2018 12:58 PM #MBBS #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS